artist and news
முலாயம் அரசை டிஸ்மிஸ் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ.எதிர்ப்புமுலாயம் அரசை டிஸ்மிஸ் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ.எதிர்ப்பு
புதுடெல்லி, சனிக்கிழமை, 17 பிப்ரவரி 2007
உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் அரசை டிஸ்மிஸ் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.உத்தரபிரதேசத்தில் பகுஜன சமாஜ் கட்சியில்ருந்து கட்சி தாவிய 13 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.இந்த எம்எல்ஏக்கள் 13 பேரும் முலாயம் அரசுக்கு ஆதரவளித்து வந்த நிலையில் ,அவர்களது பதவி நீக்கம் முலாயமுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அவரது அரசு பெரும்பானமை பலத்தை இழந்துவிட்டதாகவும் , எனவே அதனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் , உ .பி அரசியல் நிலைமை குறித்து நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தியது. அப்போது முலாயம் அரசை டிஸ்மிஸ் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இது குறித்த தகவல் உ.பி.அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில, முலாயம் அரசை டிஸ்மிஸ் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது . டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரட் ,முலாயம் அரசு பெரும்பான்மையா அல்லது சிறுபான்மை அரசா என்பதை சட்டசபையை கூட்டி பலப்பரீட்சை நடத்தி பார்க்க வேண்தும் என்று கூறினார் .
(மூலம் - வெப்துனியா
No comments:
Post a Comment