purachi ithalil
hai i am munibala8 talk with us what are you doing now? please stop the doing the work now.what shall you aim?
புதிய கலாச்சாரம் - ஜூலை 2006
document.write(GetThamizhDate('Friday, September 08, 2006'))
வெள்ளி, செப்டம்பர் 08, 2006
புதிய கலாச்சாரம் - ஜூலை-2006
(நுகர்வு வெறி பற்றிய சிறப்பு இதழ்)
அட்டைப் படக் கட்டுரை:நுகர்பொருளே பரம்பொருளாக! (இந்த பச்சை, முன்னேற்றத்தின் வண்ணமா வக்கிரத்தின் சின்னமா?) - கார்மேகம்
""கணவன் - மனைவிக்கும் - குழந்தைகளுக்கும் - நண்பர்களுக்கும் கூட நேரமில்லாமல் அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்க்ள். உழைப்பு நேரத்தையும் ஓய்வு நேரத்தையும் ஒரெ சேர சந்தையிடம் அடகு வைத்ததனால் ஏற்பட்டுள்ள இடைவேளியை அவர்கள் அடைத்தாக வேண்டும் - பொருட்களைக் கொண்டு!""
""தி இந்து நாளேடு சென்னையில் நடத்திய 'மெட்ரோ பிளஸ் லைப் ஸ்டைல் ஷோ'வில்...""
""பசிப்பிணி என்ற சொல்லைத்தான் நாம் அறிந்திருக்கிறோம். வசதிப்பிணி(affluenza) என்ற நோயை உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது அமெரிக்கா. 'மேலும் வாங்கு, மேலும் வாங்கு என்ற வெறி பிடித்த துரத்தலின் விளைவாகத் தோன்றும் மிகை உழைப்பு, கடன், பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய.....""
""விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தவைகளில் பல் இதற்க்கு முன்னர் கேள்வியே பட்டிராத பொருள்களென்றாலும் அவை ஒவ்வொன்றின் 'அத்தியாவசிய'த் தன்மையை விளக்கும் விற்பனை பிரதிநிதிகளுக்கும்....""
""இலவச டிவிக்கு வோட்டுப் போட்ட தமிழ் நாட்டில் ரூ400,000 விலையில் 40" ப்ளாஸ்மா டிவி.....""
""60% - மக்களுக்கு குழாய் இணைப்பு, குடி நீர், கழிவறை இல்லாத நாட்டில், டிவி, இண்டர்நெட்.... பொருத்தப்பட்ட குளியலறை ரூ 2,50,000,.....""
"" நேர்த்திக் கடனை செலுத்துவதற்க்கு கூட கடன் வாங்கி பஸ் பிடிக்கும் பகதர்கள் நிறைந்த நாட்டில் ரூ 4 லட்சத்தில் வேள்ளி பூசையறை...""
""உயிர் காக்கும் 150 மருந்துகளீல் தன்னிறைவு இல்லாத நாட்டில்......ரூ1.5 லட்சம் மதிப்புள்ள மசாஜ் நாற்காலி"""
""......அங்கே சோபா செட்டைப் பார்த்தவர்கள் வரவேற்பறையின் போதாமையை உண்ர்ந்தனர். சிறிய காரைப் பார்த்தவர்கள் இரு சக்கர வண்டியின் போதாமையை உணர்ந்தனர், ப்ளாஸ்மா டிவியை பார்த்த பெண்கள் கணவனின் போதாமையை உணர்ந்தனர், அழகு சாதன மாடல்களைப் பார்த்த கணவன்மார்கள் மனைவியின் போதாமையை உணர்ந்தனர்....""
""மொத்தத்தில் ஞானிகளும் முனிவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் முயன்றும் மக்களூக்கு உணர்த்த முடியாதா வாழ்வின் போதாமையை மூன்றே மணி நேரத்தில்......""
""புதிய பொருளாதார கொள்கையினால் உருவாகியிருக்கும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புதிய வேலை வாய்ப்புகளும், ஐந்திலக்க சம்பளமும் இந்திய நகர்ப்புற மக்களிடையே ஒரு வீக்கத்தை ஏற்ப்படுத்தியிருக்கிறது... இதை வளர்ச்சி என்று ஊதிப் பெருக்கி அறுவடை செய்ய பன்னாட்டு கம்பேனிகள்......""
""உழைப்பு நேரம் போக மீதமுள்ள நேரத்தில் மக்கள் ஈடுபட வேண்டிய படைப்பூக்கமுள்ள ஒரே நடவடிக்கை கடை வீதிக்குப் போய் ஷாப்பிங் செய்வதுதான்....""
""ஏனென்றால் இந்த ஷாப்பிங் அனைத்தும் கடனில் தான் செய்யப்படுகிறது.....""
""ஒரு அமெரிக்க தொழிலாளீ 1960-களில் வேலை செய்ததை விட இன்று அதிக நேரம் வேலை செய்கிறான்....இதனால் ஏற்ப்பட்ட நேரமின்மை காரணமாக ஒரே வீட்டில்... தனித்தனி தீவுகளாக..... 90-% விவாகரத்து""
""பொருட்களின் பால் வளர்க்கப்படும் 'யூஸ் அண்ட் த்ரோ' கலாச்சாரம் மனித உறவுகளுக்கும் பர்வுகிறது. பயன்படாத மனைவியோ, நண்பனோ..... காலம்காலமாக வேலை பார்ந்த தொழிலாளீயோ.....""
""2004-ஆம் ஆண்டு கணக்குப்படி நம் நாட்டில் பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 70% பேர் தகவல் தொழில் நுட்பத்துறையை சேர்ந்தவர்கள்.""
""பசிப்பிணியால் துன்புறும் நமது நாட்டிற்க்கு வசதிப்பிணியால்.....""
""உங்கள் பெற்றோரும் பிள்ளையும் டிவியுடன் செலவழிக்கும் நேரம் அதிகமா அல்ல்து உங்களுடன் செலவழிக்கும்..... டிவி விளம்பரங்கள் உங்கள் வாங்கும் விருப்பத்தை தீர்மானிக்கவில்லையா?""
""இந்த நுகர்வு மோகம் உங்கள் உறவினர் மத்தியில், நண்பர்கள் மத்தியில் ஏன் உங்கள் குடும்பத்திற்க்குள்ளேயே இனம் புரியாத சுயநலவாதிகளை உருவாக்கியிருப்பதை நீங்கள் இன்னும் அடையாளம் காணவில்லையா?""
""இந்த பொருள் மோகம் தானாக உருவாவதல்ல. முதலாளி வர்க்கத்தால் திட்டமிட்டு....கன்வேயர் பெல்ட்டின் மறுமுனையில் உங்கள் வாய். நாளொன்றுக்கு 10 லட்சம் பாட்டில் கோக் உற்பத்தி என்றால் தினம் ஒரு பாட்டில் குடிப்பதற்க்கும். அதுவே 20 லட்சம் என்றால் 2 பாட்டில் குடிப்பதற்க்கும் நீங்கள் தயாரிக்கப்படுகிறீர்கள்""
""......100,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நாட்டில், கையில் கிரெடிட் கார்டுகளுடன் எதை வாங்குவது என்று தெரிவு செய்ய முடியாமல் கடைகளில் அலை மோதுகிறது ஒரு கூட்டம்.""
""அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ சக மனிதர்களின் துயரத்தைப் பற்றியோ அக்கறையில்லை......"""
""கணவன் - மனைவிக்கும் - குழந்தைகளுக்கும் - நண்பர்களுக்கும் கூட நேரமில்லாமல் அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்க்ள். உழைப்பு நேரத்தையும் ஓய்வு நேரத்தையும் ஒரு சேர சந்தையிடம் அடகு வைத்ததனால் ஏற்பட்டுள்ள இடைவேளியை அவர்கள் அடைத்தாக வேண்டும் - பொருட்களைக் கொண்டு!""
*** ***
பின் அட்டைக் கவிதை:
மறுகாலனிய திணை மயக்கம் - துரை.சண்முகம்
கவிதையில் சில பகுதிகள்:
""பிரிவுத்துயராற்றாப் பிள்ளையின்
பருவத் துயர் போக்க
வாசலில் ஹீரோ ஹோண்டா.
வரைவு கடந்த தலைவியின் வாட்டம் போக்க
பசலை தீர்க்கும் சாம்சங் டி.வி.
அலர் தூற்றும் அண்டை, அயலாருக்கு
கலர் காட்டும் செல்பேசி.
வளப்பமுடன் இல்வாழ்வு காட்டுபவன்
பழக்கமெனும் உரிமையில்
ஓட்டடா வண்டி என்றேன்.
ஹி... ஹி... எரிபொருள் இல்லை என்றான்.
காட்டடா செல்போன் என்றேன்.
கார்டு போடவில்லை என்றான்.""
.. . . . . .. . . .. . . . .
.. . . . . . .. . . . . .. . .
.. . . . . .. . . . . .
""இன்னொருவன் நிலைகண்டு
அருவெறுக்கும் மலவண்டு.
அவனும் இவனும் உடன்போக்கு ஊட்ட
தவணை முறையில் தள்ளிக்கொண்டு வந்தான்
ஒரு வாகனத்தை. மூன்றாவது தவணைக்கு மேல்
முடியாததால் கள்ளச்சாவிபோட்டு கடைக்காரன்
வண்டியைத் தள்ளிப் போவான் என்றஞ்சி
தன் வீட்டில் வைக்காது தான் வங்கிய பஜாஜ் பல்சரை
தள்ளி நாலாவது வீட்டில் வைத்து
தினமும் மூடி வைக்கிறான் கேவலத்தை.
பல்சான்றீரே! பல்சர் வண்டியிரே!
பகர்வது கேள்மின்!
எச்சில் ஊறும் நுகர்வு வெறி, எச்சரிக்கை!
எல்லாத்திசையிலும் கள்ளச்சாவிகள்.""
*** ***
தலையங்கம்:
சாமியே ஐயப்பா, முற்போக்கு என்பது பொய்யப்பா!
""இந்த பங்காளிச் சண்டையில் பெண்களை இழிவுபடுத்துவதுதான் கண்டனத்திற்குரியது...""
""இந்த பிரச்சனையில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்டுகள் 'சாமியே ஐயப்பா முற்போக்கு பொய்யப்பா' என்று சரணம் பாடுகிறார்கள். தீட்டுப்பட்ட ஐயப்பனுக்கு இரண்டு மாதம் பரிகாரச் சடங்கு ......""
""ஜெயமாலா கதை, ஏட்டு முதல் எஸ்.ப.. வரை ஜெயலட்சுமி கதை போல நீள்வதற்க்கான வாய்ப்பு இருக்கிறது. அல்லது தேசநலன் மற்றும் தெய்வ நலன் கருதி இந்த தேவரகசியம் கமுக்கமாக.....""
""எவ்வாறாயினும், ஆன்மீக மோசடிகளை அம்பலப்படுத்துவதில் ஆத்திகர்களுக்கு உள்ள திறமை நாத்திகர்களுக்கு இல்லை என்ற உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.""
*** ***
நூல் அறிமுகம்:
ஈழம்: சமர் புரியும் உண்மைகள்!
1. இலங்கை: யுத்தத்தின் பரிணாமமும், உலகமயமாக்கலின் படையெடுப்பும்
2. ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை
3. இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு
ஆசிரியர்: பி.இரயாகரன்.
வெளீயீடு: சமர், பிரான்சு.
இனப்பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்க விரும்புவோர்க்கு துணை புரிபவை இந்த நூல்கள்.
""அண்மையில் பிராபகரனின் மகன் வெளிநாடு சென்று கல்வி கற்க இலங்கை அரசின் ஊடாக கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) எடுத்த செய்தி மெதுவாக கசிந்துள்ளது. இதுவரை புலிகள் இதை மறுக்கவில்லை....""
""சிங்கள இனவெறியையும் ஏகாதிபத்தியங்களையும் எதிர்க்கும் புரட்சிகரக் குழுக்களைக்கூடச் செயல்பட அனுமதிக்காத புலிகள், தன்னார்வக் குழுக்களை மட்டும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருப்பதை..... ஏகாதிபத்திய நிதி உதவியில் இலங்கையில் 3000 தன்னார்வக் குழுக்கள் செயல்படுகின்றன""
""உலகமயமாக்கலின் அதிகாரத்தின் கீழ் நடைபெறும் யுத்தத்தின் சகலவிதமான தேசவிரோத நடவடிக்கைகளையும் இனங்காட்டுவதோடு, ஒரு தேசத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அரசியல் யுத்தத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது இந்நூல்""
""....'சமாதானமா? யுத்தமா? என்பதை மையமான பொருளாக்கிய ஏகாதிபத்தியம் விரிவாகவே களமிறங்கியுள்ளது. புலிகளுக்கும், அரசுக்கும் பின்பக்கமாகக் கைகள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் சமாதானம் பற்றி மூலதன் உத்தரவுகளை இடுகிறது...""
""மூன்றாவது தமிழீழத் தேசிய விளையாட்டு விழாவை புலிகள் 20.2.2004 அன்று கிளிநொச்சியில் நடத்தினர். அந்தத் தேசிய விழாவில் கோகோ கோலா விளம்பரங்கள், புலிக் கொடியை விட பெரிய அளவில், புலிக் கொடியின் பின்னணியில் வடிவமைக்கப்பட்டிருந்தது""
*** ***
கட்டுரைகள்:
#1) உலகக் கோப்பைக் கால்பந்து 2006:
விளையாட்டுக்கு கால் பந்து வியாபாரத்துக்கு முழுப்பந்து - இளநம்பி
""காரணம் அந்த சொற்றோடர் கூட ஃபிபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மௌனத்தால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.....""
""அந்த சொல்லை(உலகக் கோப்பை கால்பந்து) பயன்படுத்திய 420 நிறுவனங்கள் மீது ஃபிபா உலகெங்கும் வழக்கு தொடுத்திருக்கிறது..""
""ஆனால், ஃபிபாவோ கால்பந்தை வளர்ப்பதற்க்குப் பதில் காசை அள்ளுவதிலும் மோசடி செய்வதிலும் குறியாக இருக்கிறது. அப்படி சமீபத்தில் ஒரு ஊழல் விவகாரம் பிபிசி தொலைக்காட்சியின் பனோரமா நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தப்பட்டது""
""கால்பந்தின் நினைவுகளில் தோய்ந்து எழும் படிமங்கள் கவித்துவமானவை. இந்தக் கவித்துவம் போட்டியை நேரடி ஒளிபரப்பில் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து எழவில்லை. உலக மக்களில் பெரும்பான்மையினர் இன்னமும் கால்பந்தைக் காதலிக்கிறார்கள் என்பதே அதன் தோற்றுவாய்""
*** ***
#2) இடஒதுக்கீடு எதிர்ப்பு:
ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்! - பால்ராஜ்
""சமமானவர்களுக்கு இடையில்தானே சமமான போட்டி நிலவ முடியும் என நாம் சொன்னால், 'உலகம் தெரியாதவன்' என அவர்கள் சிரிக்கக் கூடும். ஏனெனில், இந்தச் சமமான போட்டிக்கான சமத்துவக் கோட்பாட்டில்தான் உலகமயமே அடங்கி இருக்கிறது. அது எப்படிப் பட்ட சமமான போட்டி? கோகோ கோலாவோடு காளிமார்க் சோடா மோதும் சமமான போட்டி.""
""தகுதி'யைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் நிர்வாக ஓதுக்கீட்டு முறையைப் பற்றி மட்டும் இவர்கள் மறந்தும் வாய் திறப்பதில்லை. 2 லட்சம் கொடுத்து, ஒரு எருமை மாட்டைச் சேர்த்து விட்டால் கூட, அதையும் வகுப்பில் உட்கார வைத்து, பாடம் நடத்தி பட்டம் வாங்கித் தரக்கூடிய தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் பகற்கொள்ளையைக் குறித்து இவர்கள் யாரும் இப்படி இரத்தம் கொதிக்க குமறுவதில்லை""
""மெல்ல வளர்ந்து இப்பொழுது, பார்ப்பனிய ஆன்மாவும், உலகமய முகமும் கொண்ட ஒளிரும் இந்தியா தலைவிரி கோலமாக ஆடிக் கொண்டிருக்கிறது. இக்கோர ஆட்டத்தை இரண்டாயிரம் வருடப் பொறுமையோடு சகித்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மை இந்தியாவின் மக்கள். அந்தப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் உடைபட்டுக் கொண்டிருக்கிறது.""
*** ***
#3) நேபாளம்:
விண்ணில் தவழும் செங்கொடி!மண்ணில் கமழும் புரட்சி!!
தமிழாக்கம்: இளந்தீபன்
ஆங்கில மூலம்: அமித் சென்குப்தா, 3-6-2006 தெஹல்கா வார இதழ்.
""நாங்கள் கர்னாலி நதியைக் கடக்கும்போது நடுச்சாமத்தின் கரிய இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. கட்டுறுதி கொண்ட ஒல்லியான தேகத்துடன் சீருடை அணிந்த ஒருவர் எங்கள் பாதைக்கு குறுக்கே வந்து பின் இருளில் மறைந்து போனார். எங்கள் கார் டிரைவர் குருஜி, 'மாவோயிஸ்ட்' என்று முணுமுணுத்துக் கொண்டார். கடந்த 9 நாட்களில் சுமார் 1,000 கி.மீ. தூரம் மாவொயிசக் கட்டுப்பாட்டுப் பிராந்தியங்களிலே பயணம் செய்ததால், நாங்கள் ஆச்சரியப்படவில்லை""
""காத்மாண்டு பாராளுமன்றத்தில் நேபாள மக்கள் குடியரசின் சின்னமான அரிவாள் சுத்தியல் காட்சி தருகிறது...""
""கஜூரா கிராமத்தின் ஏழை தலித் மக்கள் காலனியில், ஷாகித் சேது பிக்காவின் பலவீனமான 3 குழந்தைகள் எங்களைச் சுற்றி ஓடிக் கொண்டே ஜனநாயகத்தை வாழ்த்தி சில முழக்கங்களை எழுப்பியபடி இருந்தன. 'உங்கள் அம்மா எங்கே?' என்று நான் கேட்டேன். 'மன்னன் சுட்டுக் கொன்று விட்டான்,' என்று பதிலளித்தான்....""
""பழைமை எண்ணங்கொண்ட, சீரழிந்த அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகள் ஒருபுறம்; கனவுகளைத் தேக்கி, தமது உயிரைப் பணயம் வைத்து, அவற்றை நிறைவேற்ற துடிப்போடுக் காத்திருக்கும் இளம் லட்சியவாதிகள் மறுபுறம் என நேபாளத்தை இப்போது பார்க்கிறேன்.""
*** ***
#4) அனைத்து சாதியினரும் அர்ச்சகராக..... சட்டம் மட்டும் போதுமா?சாதி ஒழிப்புப் போராட்டம் வேண்டாமா? - துரை.சண்முகம்
""பார்ப்பனியமே கலாச்சாரமாக வாழ்வியலாக வலம் வருவதை எதிர்த்து தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகள் கருத்தியல் ரீதியாகப் போராடுவது இல்லை. "பிரதோஷத்திற்கு வருகை தரும் தளபதியே வருக!" என்று போஸ்டர் ஒட்டினாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை. ஏனென்றால் இவர்களின் சமரச'சன்'மார்க்கமான சன் டிவி முதல் தினத்தந்தி வரை அனைத்தும் இந்த பார்ப்பன வாழ்வியலை முன்னின்று பரப்புகின்றன.""
""தனிக்கிணறு, தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்று பார்ப்பினிய சித்தாந்தம் நடைமுறையில் கோலோச்சும்போது, மேலிருந்து போடப்படும் சட்டம் என்ன லட்சணத்தில் அமலாகும்? கண்டதேவி தேர்வடம் பிடிக்க தலித்துகளுக்குள்ள உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடனே நாட்டார்களெல்லாம் சட்டத்தின் ஆட்சியைப் பணிந்து ஏற்றுக் கொண்டு விட்டார்களா?""
""வேலூர், டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் கவுண்டரான இராமச்சந்திரன்(வயது 39) என்பவருடைய கருத்தோட்டம் "எஸ்சி எல்லாம் வந்தா எப்படி மற்ற சாதிக்காரங்க கோயிலுக்கு வருவாங்க. அந்த இடத்துக்கு அவர்கள்தான்(அய்யர்). மத்த சாதி வந்தா சுத்தபத்தம் இருக்காது"""
""....கோயில்களில் கருத்துக் கணிப்பு நடத்தினோம்.... இந்தச் சட்டத்தை எதிர்க்கும் பார்ப்பனரல்லாதவர் சிறுபான்மையினர்தான். ஆனால் எதிர்ப்பவர்களீன் மூர்க்கமும், கோபமும் ஆதரிப்பவர்களிடம் இல்லை. ஆதரவு என்பது செயலூக்க மற்ற ஆதரவாகவே உள்ளது.... திமுக அனுதாபி என்பதால் சட்டத்தை ஆதரிப்பது என்பதாகவோதான் ஆதரவு உள்ளது...""
""நீரை இலக்கு நோக்கிப் பாய்ச்சாத போது அது தானாக வழி தேடிக் கொள்வது போல இந்தச் சட்டமும் பார்ப்பன பாசனத்திற்க்கே வடிகாலாகும்""
""பார்ப்பான் சூடம் காட்ட, பிசி தேங்காய் உடைக்க, எஸ்சி வெளியே நந்திக்கு தண்ணி ஊத்த, நடைமுறையில் பிரச்சனை பழைய சாதி ஆதிக்க வழிமுறைகளுக்கு ஏற்ப தானாகத் தீர்க்கப்பட்டுவிடும்.""
"".... கொண்டு சமூகத்தை தட்டி எழுப்பாவிடில் இந்த அரசாங்கச் சட்டம் காகிதச் சட்டமாகவே இருக்கும். ஆகம சட்டமே அமலில் இருக்கும்.""
*** ***
#5) ஐ.ஐ.டி. - ஐ.ஐ.எம்.:தேசத்துரோகிகள் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி
""அசையும் மலைகள், நகராத ஆறுகள், பூச்சொரியும் நறுமணமுள்ள முள் காடுகள்..... இவற்றை சென்னை ஐஐடிக்கு வந்தால் பார்க்கலாம்""
""சாதித் திமிர் நிரம்பி வழிய அசையும் மலைகளாக இயக்குனரும், பார்ப்பன பேராசியர் குழுவும்......""
""ஒவ்வொரு ஐஐடி கிளையும் பெறும் ஆண்டு நிதி சுமார் 100-130 கோடி...""
""2005-2006இல் மட்டும் 136 அந்நியக் கம்பேனிகள் ஐஐடி வளாகத் தேர்வுக்கு வந்தன...""
""இந்தியக் கல்வியின் எதிர்காலத் திட்டங்களையும் உலக வங்கியே வழி நடத்துகிறது....""
""....அறிவு திறமை குறித்து பார்ப்பினியத்தின் வாதமும் பன்னாட்டு மூலதனத்தின் வாதமும் ஒன்று படும் புள்ளி இதுதான்""
""மருத்துவர்கள் ஏற்றுமதி, நோயாளிகள் இறக்குமதி! அறிவாளிகள் ஏற்றுமதி, அறிவு இறக்குமதி - இவர்களுக்கு நம் வரிப்பணத்தை கொட்டியழுவது இந்தியக் குடிமகனின் தலைவிதி!""
*** ***
திரை விமர்சனம்:
புதுப்பேட்டை: நிழல் உலகைக் கொண்டாடும் திரை நிழல் - வேல்ராஜன்
""ரவுடியிசத்தின் பின் உள்ள ஆளும் வர்க்கத்தை கவனமாகத் தவிர்த்துவிட்டு, அவர்களை அரசியல்வாதிகளுடன் மட்டும் முடிச்சுப் போட்டுக் காட்டுவது வெறும் அசட்டுதனமல்ல; திராவிட இயக்கத்தால் அரசியல் தூய்மை கெட்டுவிட்டதாக்ப் புலம்பும் பார்ப்பனக் கும்பலுடைய அரசியல் கண்ணோட்டத்தின் கலைப்பாதிப்புதான் இத்தகைய சித்தரிப்பு""
""பம்பாய் முன்னாள் கடத்தல் மன்னனான ஹாஜி மஸ்தான் பின்னாளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் போது இதிலேயே இவ்வளவு பணம் கிடைப்பது முன்பே தெரிந்திருந்தால் கடத்த தொழிலே செய்திருக்க மாட்டேன் என்றான். இன்று, இறக்குமதி - ஏற்றுமதிக்கான தடைகள் அனைத்தும் விலக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கடத்துவதற்க்கு என்ன அவசியம் இருக்கிறது? ஆகவே நான்காந்தர ரவுடியிசம் அதன் தேவையை இழக்கும் நிலையில்தான் ரவுடிப்படங்கள் அதிகம் வருகின்றன.""
""1970-களில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த பம்பாய்த் தொழிற்சங்கத்தை உடைப்பதற்க்கு காங்கிரசுக்கும், முதலாளிகளுக்கும் சிவசேனா ரவுடிகள் தேவைப்பட்டார்கள். இன்றோ அந்த வேலையை நீதிமன்றமும், போலீசும் பார்த்துக் கொள்கின்றன....""
""உண்மையான ரவுடியிசம் தொடங்கும் இடத்தில் புதுப்பேட்டை முடிந்துவிடுகிறது""
*** *** *** *** *** ***
எழுதியவர்: இலக்கியன் at
document.write(GetThamizhDate('2:18 AM'))
2:18 AM 5 மறுமொழிகள்
புதிய ஜனநாயகம் - செப்டம்பர் 2006
document.write(GetThamizhDate('Thursday, September 07, 2006'))
வியாழன், செப்டம்பர் 07, 2006
புதிய ஜனநாயகம் - செப்டம்பர்-2006
அட்டைப் படக் கட்டுரை:
கருணாநிதி - அன்புமணி - புத்ததேவ்கோக்-பெப்சியின் புதிய அடியாட்கள் -குப்பன்
""கோக்-பெப்சி நிறுவனங்கள் விற்கும் குடிதண்ணீரில் மட்டும் நச்சுப் பொருட்களை சுத்தமாக்கிவிட முடியும் போது குளிர்பானங்களில் மட்டும் ஏன் நச்சுப் பொருட்கள் இருக்கின்றன?""
""அதற்கு பதிலாக, வேண்டுமென்றே, தூரோகத்தனமாக ஒரு வேலையை பா.ஜ.க. அரசு செய்தது. குளிர்பானத் தாயாரிப்புக்குப் பயன்படும் தண்ணீரில் பூச்சிக் கொல்லி நச்சின் அளவை வரையறுத்துவிட்டு, தயாரித்து முடித்து விற்பனைக்கு வரும் குளிர்பானத்தில்....""
""அந்த வரையறையை அவர்கள் வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்னதாக மக்கள் துரோகி அன்புமணி இராமதாசு பொறுப்பில் உள்ள சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகச் செயலாளர் தனது முடிவை வெளியிடாது தள்ளி வைக்கும்படி இந்தியத் தரக் கட்டுப்பாட்டுக் கழகத்துக்கு கடிதம் எழுதினார்""
""போலி கம்யூனிஸ்டுகள் தாங்கள் ஆளும் கேரளாவில், கோக்-பெப்சிக்கு எதிராக நாட்டிலேயே "அதிதீவிர" நடவடிக்கை எடுத்தபோதும், துரோகக் கம்யூனிஸ்டுகளின் தளபதியும் மே.வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா அது பற்றி தனக்குத் தெரியாது....""
""இத்தனைக்கும் கொல்கத்தாவில் விற்கப்படும் கோக்-பெப்சியில்தான் நாட்டிலேயே மிக அதிகமாக - அதாவது 140 மடங்கு நச்சு பொருள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.""
""......வக்காலத்து.....போலி முற்போக்கு-போலி கம்யூனிஸ்டு அணியின் தளபதி கருணாநிதி. புதுச்சேரியில் தடைவிதிக்காது, பயனேதும் இல்லை என்கிறார். அண்டை மாநிலங்களில் கள்ளும் சாராயமும் ஆறாக ஓடியபோது இங்கு மட்டும் மது விலக்கு இருந்தது எப்படி என்ற கேள்வி அந்தப் 'பகுத்தறிவாளருக்கு" எழவில்லை""
""...600 கோடி விளம்பரத்துக்கு வாரியிறைக்கிறது.... அதில் பெருந்தொகை, நான்கு மாநிலங்களில் 10 அலைவரிசைகளை நடத்தும் கருணாநிதி குடும்பத்து சன் குழுமத்திற்குப்......""
""சமூக நீதி நடிகர் ராமதாசின் குலக்கொழுந்து அன்புமணி இராமதாசு..... பன்னாட்டுத் தொழில்கழகங்களின் எடுபிடியாகவே செயல்படுகிறார்....""
*** ***
பின் அட்டைப் படம்:
1800-1801தென்கத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் மரபை உயர்த்திப் பிடிப்போம்!
1806 - வேலூர் சிப்பாய்ப் புரட்சி 200 ஆம் ஆண்டு
1857 - வட இந்திய சுதந்திரப் போர் 150-ஆம் ஆண்டு
1906 - ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தோழர் பகத்சிங் பிறந்தநாள் 100 ஆம் ஆண்டு
ஆகஸ்டு 15 போலி சுதந்திரத்தைத் திரைகிழிப்போம்!
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!- என 14.8.06 அன்று தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்!
பொங்கி எழட்டும் சுதந்திர வேட்கை!
பொசுங்கி அழியட்டும் மறுகாலனியாதிக்கம்!
*** ***
தலையங்கம்:
ஈழப் போர்: நீடிக்கும் இழுபறி!
""ஈழ மக்கள் மீது ராணுவ ரீதியான தீர்வு எதையும் திணிக்க முடியது என்பதையே இன்றைய போர் நிலைமைகள் காட்டுகின்றன""
*** ***
கட்டுரைகள்:
#1) "நாட்டைக் காக்க கோக்கை விரட்டு!" - நாடெங்கும் பரவும் கோக் எதிர்ப்புப் போராட்டங்கள்
""கோக்கும் பெப்சியும் வெறும் நச்சுப் பானங்களல்ல; அவை, அமெரிக்க மூத்திரம்; அமெரிக்க மேலாதிக்கத்தின் சின்னம்; ஏகாதிபத்தியக் கொள்ளையின் அடையாளம். கோக் எதிர்ப்புப் போராட்டம் என்பது மறுகாலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் அங்கம்....""
"" நெல்லை சந்திப்பு பேரங்காடி முன்பாக கோக்-பெப்சியைத் தடை செய்யக் கோரி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது கோக் எதிர்ப்புப் போராட்டக் குழு தலைவரான வழக்குரைஞர் இரா.சி. தங்கசாமி அவர்கள் தலைமையில்.... நெல்லை மாவட்ட வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் முருகேசன், பா.ம.க. மாநாகரத் தலைவர் மோகன்ராஜ், மானூர் ஒன்றிய கவுன்சிலர் மணி.........""
""கோக் ஆலை அமைந்துள்ள நெல்லை-கங்கை கொண்டானில் ஆகஸ்டு 15 அன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில், கோக் ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்து அதை வெளியேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.""
""......நச்சுப்புகை, கழிவுகள் இவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றி ஆவேசமாக குற்றம்சாட்டிய உறுப்பினர்களும், பொதுமக்களும் கோக் ஆலையை உடனடியாக வெளியேற்றக் கோரினர். கோக்கிற்கு ஆதரவாக பேச முற்பட்ட கைக்கூலி மனோகரன் என்பவனை கூட்டத்தினர் ஆத்திரத்தோடு தாக்க முற்பட்டதும் போலீசு தலையிட்டு அவனை மீட்டுச் சென்றது...""
""ஓங்கட்டும் கோக் எதிர்ப்புப் போராட்ட்ம்! ஒழியட்டும் மறுகாலனியாதிக்கம்!""
*** ***
#2) எச்சில் காசில் ஏகாதிபத்திய எதிர்ப்பு!
""ஏகாதிபத்தியத்தை வீழ்த்த பாட்டாளி வர்க்க சோசலிசமே ஒரே தீர்வு - என்ற சிந்தனைக்கு மக்கள் சென்றுவிடக்கூடாது என்று தடுப்பதற்காகவும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை சீர்குலைப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள கைக்கூலி அமைப்புதான் உலக சமூக மாமன்றம்(WSF). ஃபோர்டு பவுண்டேசன், ........ எச்சில் காசில் வயிறு வளர்க்கும் தன்னார்வக் குழுக்களின் தலைமைப் பீடம்தான் உ.ச.ம...""
""இந்த மாநாட்டை நடத்த, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வக் குழுக்களைவிட சி.பி.எம். கட்சியின் மக்கள் திரள் அமைப்புகள்தாம் அதிக முயற்சியும் அக்கறையும் காட்டின.""
"""மாநாடு நடந்த விதமே அதன் யோக்கியதையை காட்டி விட்ட நிலையில்.....""
*** ***
#3) குற்றக் கும்பல்களின் பிடியில் திணறும் இந்தியா - ஆர்.கே
""'பொதுவில் சொன்னால், குற்றவாளிகளில் பலர் சூழ்நிலைக்குப் பலியானவர்கள்தாம்'- இப்படிச் சொன்னவர் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.""
""பெரும்பாலான கிரிமினல் குற்றங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டே நிகழ்த்தப்படுகின்றன. அப்படிப்பட்ட குற்றவாளிகள் பெரும்பாலும் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் - என்று சொல்லியிருந்தால்தான் சரியாக் இருக்கும்""
""சந்தர்ப்ப சூழ் நிலைகளால் குற்றங்கள் புரிபவர்கள்தான் பெரும்பாலும் வழக்குமன்றங்களில் நிறுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் பெரும்பாலும் தண்டிக்கப்படுகிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு கிரிமினல் குற்றங்கள் புரிபவர்கள் வழக்குமன்றங்களுக்குப் பெரும்பாலும் கொண்டு வரப்படுவதில்லை. தவறிப்போய் கொண்டு வரப்படுபவர்களும் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை - என்று சொல்லியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.""
""......போலி முதல் தக்வல் அறிக்கை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தில் நடந்த மோசடிகள் குறித்த வழக்கு. 2. சபரி மலை தலைமைத் தந்திரி கண்டர மோகனருவைக் கடத்தி மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாகக் கூறிப் போடப்பட்டுள்ள சோபா ஜான் கும்பல் மீதான வழக்கு.3. 3000 கோடி ரூபாய் அளவுக்கு போலி முத்திரைத்தாள் அச்சடித்து நாடு முழுவது......""
""இவை மூன்றும் சிறிய அளவிலான குற்ற விவகாரங்கள்தாம், அரசியல்-கிரிமினல் குற்றக் கும்பல்களால் திட்டமிட்டு, அமைப்பு ரீதியாக நடைபெறும் குற்றவிவகாரங்களூம் ஏராளமாக உள்ளன. அவை விதி விலக்கின்றி சட்டம் மற்றும் நீதியின் காவலர்களால் மூடி மறைக்கப்பட்டு, குற்றவாளிகள் பெரிய மனிதர்களாக வலம் வருகிறார்கள்......அரசியல்வாதிகள் - போலிசு அதிகாரிகள் - கிரிமினலகள் அடங்கிய முக்கூட்டை அம்பலப்படுத்திய வோரா கமிட்டி அறிக்கை விவரங்கள், இன்றைய அரசியல் - சமூக அமைப்பு முழுவதும் புழுத்து நாறுவதையே காட்டுகின்றன""
*** ***
#4) அரசு பயங்கரவாதம் - மத பயங்கரவாதத்தால் பிளவுபடும் மும்பய் - செல்வம்
""1970-களில் மில் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்களால் சிவந்திருந்த மும்பய் நகரம், இப்பொழுது காவியையும், பச்சையையும் பூசிக் கொண்டு அருவெறுப்பாகக் காட்சி அளிக்கிறது. முஸ்லீம் தீவிரவாதிகளூம், இந்திமத பயங்கரவாதிகளும் எது நடக்க வேண்டும் என்று விரும்பினார்களோ, அந்த பிளவு மும்பையில் ஆழமாகப் பரவி வருகிறது.""
""போலி கம்யுனிஸ்டுகள் தூக்கி பிடிக்கும் நேரு பாணி மதச்சார்பின்மை கொள்கை முற்றிலும் தோல்வியடைந்து விட்டதற்கு, மும்பய் நகரமே சாட்சி. மதவெறி பயங்கரவாதத்திற்க்கு எதிரான போராட்டத்தை நாடு மறூகாலனியாக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இணைத்து நடத்தும் பொழுதுதான், முஸ்லீம் மதவெறியர்க்ளை தனிமைப்படுத்த முடியும்; இந்து மதவெறி பயங்கரவாதத்தை நேருக்கு நேராகத் தாக்க முடியும். அதுவரை மும்பயில் நிலவும் அமைதியை, வெடிகுண்டின் திரி எரியும் பொழுது ஒருவித அமைதி நிலவுமே, அதோடு மட்டுமே ஒப்பிட முடியும்.""
*** ***
#5) போலி சுதந்திரத்தைத் திரை கிழிப்போம்! மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்! - தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்முழக்க ஆர்ப்பாட்டங்கள்
*** ***
#6) எம்.ஜி.ஆர். - ஜெயா - விஜயகாந்த் மூன்றாவது கழிசடை அரசியல்வாதி! - மாணிக்கவாசகம்
""தேர்தல்களில் வெற்றி வாய்ப்பு. ஒரு 4-5 சீட்டுக்கள் கூடுதல்களாக கிடப்பது போன்ற சந்தர்ப்பவாத நலன்களூக்காகவே அரசியல் கூட்டுகளை உருவாக்கிக் கொண்டு, ஜெயலலிதாவை ஆட்சியில் அமரவைத்ததைப் போலவே நாளை விஜய்காந்தையும் ஆதரிக்கத் தயங்கமாட்டார்கள். அதனால்தான் இவர்களும் நடிகர் விஜயகாந்தும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.""
""..... ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்களின் கவர்ச்சிவாதத் தயவிலேயே அரசியல் நடத்துபவர்களாக உள்ளனர். சினிமா அரசியலை எதிர்ப்பதாக அவ்வப்பொழுது சவடாலடிக்கும் இராமதாசு, திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற தீடிர்த் தலைவர்கள் கூட இந்த எதிர்ப்பு செலவில்லாத, உழைப்பில்லாத திடீர்ப் பிரபலமடைவதற்கான விளம்பரம் என்ற வகையிலேதான் இதைச் செய்கிறார்கள்.""
*** ***
#7) லெபனான்: அமெரிக்க-இஸ்ரேலிய பயங்கரவாதம் போருக்குப் பின்னே மேலாதிக்கம் - மனோகரன்
""இயற்கை வளமும் இலக்கியச் செழுமையும் கொண்ட, கனவுகளின் தேசமாகச் சித்தரிக்கப்பட்ட லெபனான் இன்று நொறுங்கிக் கிடக்கிறது. "முறிந்த சிறகுகள்" வழங்கிய உலகப் புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரானின் லெபனான், இப்போது மீண்டும் சிறகுகள் முறிக்கப்பட்டு துடிதுடித்து.......""
""'புதிய மத்தியக் கிழக்கை நிறுவும் நேரமிது; புதிய மத்தியக் கிழக்கு திட்டத்தை யார் ஏற்கவில்லையானாலும் அவர்களை நிர்பந்தித்துப் பணியச் செய்வோம்' என்று அமெரிக்காவின் நோக்கத்தை வெளிப்படயாகவே கூறியுள்ளார், அமெரிக்க வெளியுறவு செயலரான கண்டலீசா ரைஸ். அதாவது, இஸ்ரேலிலிருந்து பாலஸ்தீன மக்களை முற்றாக வெளீயேற்றுவது, லெபனான் உள்ளிட்ட மத்தியக் கிழக்கு நாடுகளை ஷியாம் சன்னி, அரபு கிறித்தவர்கள் என மதப்பிரிவுகளின் அடிப்படையிலும் தேசிய இனச் சிறுபான்மையினர் அடிப்படையிலும் கூறுபோடுவது, எண்ணைய வளமிக்க வளைகுடா பிராந்தியத்தை விழுங்கி கேள்விக்கிடமற்ற மேலாதிக்கத்தை நிறுவுவது........""
""ஏகாதிபத்தியவாதிகளின் இம்மேலாதிக்க சதிகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், இனியும் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அரபு மக்களும் வெற்றி பெருமிதத்தில் திளைத்திருக்க முடியாது. அரபு மக்களின் ஒற்றுமை, மதச்சார்பின்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இதர ஏழை நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுடன் கூட்டிணைவு என்ற திசையில் முன்னேறினால் மட்டுமே......""
*** ***
#8) வளர்ச்சியின் பெயரால் மறுகாலனியாதிக்கம் - ரஹீம்
""அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில், இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக மாற்றிவிட்ட மன்மோகன் சிங் அரசு, உலக வர்த்தகக் கழக கூட்டத்தில் அமெரிக்காவை எதிர்த்து வெளி நடப்பு செய்திருப்பதை நாமெல்லாம் கையைக் கிள்ளிப் பார்த்துவிட்டுத் தான் நம்ப வேண்டியிருக்கும்.""
""ஜெனிவா பேச்சுவார்த்தையின் தோல்விக்கு, விவசாயத்தில் தாரளமயத்தைப் புகுத்துவதில் அமெரிக்காவுக்கும், ஏழை நாடுகளுக்கும் இடையேயுள்ள இழுபறி மட்டும் காரணம் இல்லை.""
""......குறிப்பாக, மானியக் குறைப்பு, விவசாயப் பொருள் ஏற்றுமதி, மரபீணி மாற்றம் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களின் மீது ஐரோப்பா விதித்துள்ள தடை ஆகிய விவகாரங்களில் ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவுக்குச் சில சலுகைகளை வழங்கியிருந்தால், ஜெனீவா பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்திருக்கும்; ஆகையால், கமல்நாத்தின் வெளி நடப்பை அளவுக்கு மீறீ ஊதிப் பெருக்கக் கூடாது என வர்த்தகத் துறையின் முன்னாள் செயலாளர் எஸ்.பி. சுக்லா அம்பலப்படுத்தி இருக்கிறார்.""
""..... இந்த ஆலோசனையை அமெரிக்காவும், ஐரோப்பிட யூனியனும் ஏற்று நடைமுறைப்படுத்தினால், ஏழை நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் வந்துவிடுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.""
""....இந்த பாதுகாப்பு கவசத்தை பயன்படுத்தி, அமெரிக்காவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் பருத்திக்குத் தடை விதித்து, அதன் மூலம் விதர்பாவைச் சேர்ந்த பருத்தி விவசாயிகளை இந்திய அரசு காப்பாற்றியிருக்கலாமே? அப்படித் தடை போட்டுவிடாமல், மன்மோகன் சிங்கின் கையைக் கட்டிப் போட்டது யார்?""
""உள் நாட்டில் விளைந்த கோதுமையைக் கொள்முதல் செய்யாமல், ஆஸ்திரேலியாவில் இருந்து புழுத்துப் போன கோதுமையை மத்திய அரசு இறக்குமதி செய்வதற்காக, உணவுப் பொருள் இறக்குமதி சட்டத்தை மாற்றீயமைத்தார்களே......""
""....'வளர்ச்சி' என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் தொடுக்கும் மறுகாலனியத் தாக்குதலில் இருந்து நமது நாட்டு விவசாயத்தையும், மக்களையும் காப்பாற்ற இந்த அடிவருடி கும்பலையா நம்பியிருக்க முடியும்?""
*** ***
#9) திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் - திருவாசகம் பாடத் தடை மனுநீதித் தீர்ப்பு - மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம்
""சிதம்பரம் அருகேயுள்ளா பிச்சாவரத்தில் தற்பொழுத் வசித்து வரும் வீரப்ப சோழனார் என்ற முன்னாள் ஜமீன்தார் குடும்பத்தைச் செர்ந்த முன்னோர்களீடம்தான் நடராஜர் கோவிலின் நிர்வாகம் இருந்து வந்தது. இரவில் கோவில் நடையை மூடிய பிறகு, கோவில் சாவியைப் பல்லக்கில் வைத்து பிச்சாவரம் சோழனார் ஜமீந்தார் வீட்டில் ஒப்படைக்க வேண்டும். காலையில் போய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் மரபாக இருந்து வந்தது....""
"".....கையெழுத்து இயக்கமொன்றை, சிதம்பரம் நகர் பகுதியில் மனித உரிமை பாதுகாப்பு மையம், தி.க., பா.ம.க., சி.பி,ஐ., சி.பி.எம்., வி.வி.மு., பு.ஜ.தோ.மு., பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தி வருகின்றன.""
""....ஒருவருக்கு ஒரு ரூபாய்' என்று போராட்ட நிதியினையும் வழங்கி வருகின்றனர். பல இளைஞர்களும், மாணவர்களும் அடுத்த கட்ட போராட்டத்திற்குத் தங்களையும் அழைக்கக் கோரி, பெயரையும், முகவரியையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.""
""பார்ப்பனர்களும், நீதிமன்றமும் தமிழ் வழிபாட்டு உரிமைக்கு குறுக்கே நந்தியாக நின்றாலும், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் இக்கோரிக்கைக்கு ஆதரவாக நிற்ப்பதற்கு இதுவே சாட்சி.....""
*** ***
#10) கந்துவட்டிக் கொள்ளையர்களின் பிடியில் கரூர் நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள்
""மாதம் முழுவது பீ, மூத்திரங்களில் குளித்து நனைந்து நகரத்தைச் சுத்தப்ப்டுத்தும் துப்புரவுத் தொழிலாளர்கள், அற்பமான சம்பளத் தொகையைக் கூடத் தானும் தனது குடும்பத்தாரும் அனுபவிக்க முடியாத அவலத்தை என்னவென்று சொல்வது?""
""கிருஷ்ணம்மாள் என்ற துப்புரவுத் தொழிலாளி ஆறு வருடங்களுக்கு முன்பு ரூ. 10,000 கடனாகப் பெற்றதற்கு அவரிடமிருந்து இதுவரை ரூ. 86,000-ஐ வட்டியாக மட்டுமே அபகரித்துச் சென்றுள்ளது முனியப்பன் கும்பல்.""
"",.....கீழ்த்தரமான காட்டுமிராண்டி கும்பல் என்பதற்கு, தன்னிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கிய கன்னியம்மாளின் தலைமுடியை இழுத்து, அவர் கட்டியிருந்த சேலை முழுவதையும் உருவிப் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியிருப்பதே....""
""இத்தகைய கொடுமைகளையெல்லாம் தெரிந்திருந்தும் மௌனம் சாதித்து வருகின்றன இங்குள்ள ஓட்டுக் கட்சி தொழிற்சங்கள். ..... பு.மா.இ.மு. அமைப்பினர் நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி, போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.""
*** ***
துணுக்குச் செய்திகள்:
#1) திருட்டு தீட்சிதரே
#2) "காமவெறியன் லியாகத் அலியை தூக்கில் போடு!" - பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம், திருச்சி
*** *** *** *** *** ***
No comments:
Post a Comment